தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி வெளிவந்த டாப் 5 திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இப்போது நடிகைகள் பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளை தான் அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்கள்.

அப்படி கடந்த சில வருடங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளிவந்த படங்களின் டாப் 5 பட விவரங்களை காண்போம்.

இறுதிச்சுற்று

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் என பலர் நடித்த ஒரு திரைப்படம். பணம் கிடைக்கிறதே என குத்துச் சண்டை பயிற்சிக்கு வரும் பெண், விளையாட்டு துறையில் மலிந்திருக்கும் அரசியலுக்கு எதிராகப் போராடுகிறார் அவளுடைய பயிற்சியாளர்.

இவர்கள் எப்படி போராடி விளையாட்டில் உள்ள அரசியலை நாக் அவுட் செய்கிறார்கள் என்பதே கதை.

அருவி

புறக்கணிப்பின் வலியையும் ஆயுளைக் காவு கேட்கும் நோயையும் ஏற்றுக்கொண்டு கடந்துபோகும் ஒரு வலிமையான பெண்ணை மையப்படுத்தி வந்த படம் அருவி.

அறம்

மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணற்றால் இப்போது பல குழந்தைகள் இறப்பதை நாம் செய்திகளில் கேட்கிறோம். அப்படிபட்ட ஒரு விஷயத்தை கூறும் படமாக அமைந்தது அறம்.

காற்றின் மொழி

2019ம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த ஒரு திரைப்படம். இப்பட கதைக்களத்தை சுறுக்கமாக கூற வேண்டும் என்றால் பாக்கியலட்சுமி சீரியல் என்று கூறலாம்.

கனா

ஆண்களுக்கான விளையாட்டாகப் பார்க்கப்பட்ட கிரிக்கெட்டில் புயல்போல் சுழற் பந்து வீசி, தேசிய வீராங்கனையாகும் கனவை தனது தந்தையின் துணைகொண்டு சாதித்து காட்டும் ஒரு கிராமத்துப் பெண்ணின் கதை.