சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி சென்ற பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே என்ற படத்தை கொடுத்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார். இப்படத்தை தொடர்ந்து பிரதீப்பை இயக்க பலர் தங்களது விருப்பத்தை காட்டி வருகிறார்கள்.

அப்படி தான் ஒரு தகவலும் வந்தது. அதாவது அஜித்தை வைத்து அவரது 62வது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அப்பட வாய்ப்பை இழந்ததும் பிரதீப்புடன் கைகோர்க்க முடிவு செய்தார்.

மற்றபடி இன்னும் அவர்களது படம் குறித்து தகவல் வரவில்லை.

புதிய தகவல்
இந்த நேரத்தில் தான் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தாராம்.

தற்போது அந்த படத்தில் தான் பிரதீப் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.