பிரித்தானியாவில் இணையப் பாதுகாப்பு மசோதாவின் கீழ் WhatsApp சேவையின் encrypted-messaging அமைப்பு என்கிற பாதுகாப்பு அம்சத்தை வலுவற்றதாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதற்கு பதில் தடை செய்வதே மேல் என்று WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது WhatsApp சேவையில் உள்ள encrypted-messaging அமைப்பால், அந்த நிறுவனத்தால் கூட பயனீட்டாளர்களின் செய்திகளைப் படிக்க முடியாது.
ஆனால் இணையத்தில் குழந்தைத் துன்புறுத்தல் பிரச்சினையைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்கு அது தடையாய் இருப்பதாகப் பிரித்தானிய அரசாங்கமும் குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் கூறுகின்றன.
பிரித்தானியாவில் WhatsApp செய்திகளின் ரகசியத்தன்மையைக் குறைத்தால் உலகில் உள்ள மற்ற பயனீட்டாளர்களும் பாதிக்கப்படுவர் என்று நிறுவனத்தின் தலைவர் வில் கத்கார்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உலகில் அந்தச் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் பாதுகாப்பையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் WhatsApp பயனீட்டாளர்களில் 98 விழுக்காட்டினர் பிரிட்டனிற்கு வெளியே இருப்பதால், அங்குச் சேவை தடை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அவர் குறிப்பிட்டார்