அகிலன் திரைப்படம்
ஜெயம் ரவி-பிரியா பவானி ஷங்கர் முதன்முறையாக ஜோடி சேர நேற்று (மார்ச் 10) வெளிவந்த திரைப்படம் தான் அகிலன்.
ஒரு துறைமுகத்தின் செயற்பாடுகளையும் அதன் கறுப்பு பக்கங்களையும், த்ரில்லர் மோடில் திரைக்கதை அமைத்து கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.கல்யாண கிருஷ்ணன்.
இதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை ரசிகர்கள் தான் கூற வேண்டும். முதல்நாள் பொறுத்தவரையில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன, ஆனால் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது எனப்படுகிறது.
முதல் நாள் வசூல்
தற்போது படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் படம் ரூ. 3.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.