விக்னேஷ் சிவன்-அஜித்
போடா போடி, நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என படங்கள் இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அங்கீகாரம் பெற்றவர் விக்னேஷ் சிவன்.
இவர் சினிமாவை தாண்டி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட Chess விளையாட்டை அழகாக இயக்கம் செய்தார், அதற்கு அவருக்கு நிறைய பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்தது.
அடுத்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அவரது 62வது படத்தை இயக்குவதாக இருந்தார், ஆனால் சில காரணங்களால் அவர்களது கூட்டணி அமையவில்லை.
திடீர் மாற்றம்
உடனே விக்னேஷ் சிவன் தனது புதிய படத்திற்காக விஜய் சேதுபதி மற்றும் லவ் டுடே பிரபலம் பிரதீப்பிடம் பேச்சு வார்த்தை நடத்த அதில் பிரதீப்புடனான கூட்டணி அமைந்துவிட்டது.
இவர்கள் இணையும் புதிய படம் குறித்து இன்னும் அவ்வளவாக தகவல் வரவில்லை.
இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தின் Dp, Cover Pic போன்றவற்றை எடுத்துவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அஜித் படம் கிடைக்காத விரக்தியில் இப்படி செய்கிறாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.