தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பல பிரபலங்கள் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றே.
லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
விஜய்க்கு நன்றி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாள் முன்னிட்டு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ” அனைத்திற்கும் நன்றி விஜய் அண்ணா..” என்று கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Thanx a lot @actorvijay na for everything ❤️ pic.twitter.com/iSc31Xs9q1
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2023