ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் இவர்களா ஜோடி சேர்ந்தார்கள் என ஓட்டுமொத்த மக்களும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி. பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ஏதாவது கிசுகிசுவாவது வரும்.
ஆனால் இவர்கள் திருமணம் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்ட நாள் வரை யாருக்கும் இவர்கள் காதலித்தது தெரியாது.
இருவருக்குமே இது மறுமணம், திருப்பதியில் இவர்களது திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது.
ஸ்பெஷல் பூஜை
திருமணம் முடிந்ததில் இருந்து இவர்கள் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும், வைரலாகும்.
தற்போது இவர்களது வீட்டில் ஒரு ஸ்பெஷல் பூஜை நடந்துள்ளது, அதாவது சண்டி ஹோமம் நடந்துள்ளது, அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு அனைவரும் நலம் பெற இந்த பூஜை என பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram