உடலை பராமரிக்க அதிகளவில் செலவு செய்யும் நடிகை டாப்ஸி

டாப்ஸி
நடிகை டாப்ஸி ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் ஹிந்தியிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

டாப்ஸி தற்போது கைவசம் சில தமிழ் படங்களும், பல ஹிந்தி படங்களும் வைத்து இருக்கிறார்.

Dietician செலவு..
தற்போது டாப்ஸி அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் சினிமாவில் இருப்பதால் உடலை மெயின்டெய்ன் செய்ய அதிகம் செலவு செய்வதாக கூறி இருக்கிறார்.

தனது உணவை முடிவு செய்யும் dieticianக்கு மட்டும் மாதம் 1 லட்சம் ருபாய் செலவு செய்வதாக டாப்ஸி கூறி இருக்கிறார்.

“இந்த விஷயத்தை பற்றி வீட்டில் கூறினால் அப்பா என்னை அதிகம் திட்டுவார். இது வீண் செலவு என அவர் கூறுவார். இது வீண் செலவு இல்லை, அத்தியாவசியமான ஒன்று” என டாப்ஸி கூறி இருக்கிறார்.