தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களில் நடித்து வருபவர் தான் அசோக் செல்வன். இவர் 2013 -ம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற படங்கள் வெளியானது. இப்படங்களுக்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.
தற்போது இவர் நெஞ்சமெல்லாம் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திருமணம்
இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன், நடிகர் மற்றும் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம்.
தற்போது இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.