பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, பொருட்கள் வாங்கும் போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டணப்பட்டியல் வழங்கப்பட மாட்டாது. நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
காகிதங்களை வீணாக்குவதை தடுக்கவும், கழிவுகள் சேருவதை தடுக்கவும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொருட்களுக்கான கட்டணப்பட்டியலை ‘டிஜிட்டல் முறையில் தொலைபேசிகளுக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கப்படும்.
இந்த நடைமுறை கடந்த வரும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, முதலில் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மூன்று மாதங்கள் பிற்போடப்பட்டு வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.