வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும். மேலும் இந்த ஜூஸ் பல்வேறு நோய்களை சரிசெய்யக்கூடியவை. கோடை காலத்தில் தாகத்தை தணிப்பது போல், பல நன்மைகளை உடலுக்கு செய்கிறது. விட்டமின் சி அதிகம் உள்ளது.
நீர்சத்தும் நிறைந்தது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம், கால்சியம் என நிறைய சத்துக்களை கொண்டிருக்கிறது. கூந்தல் சருமம் மற்றும் நகங்களின் அழகை அதிகமாக்குகிறது. தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், ஒரு மாதத்தில் மேனி மெருகேறும். வேண்டுமென்றால் முயன்று பாருங்கள். கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்யும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். அதேபோல், வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும்.
இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும். நம் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கொழுப்பு செல்களே பல பாதிப்புகளைத் தரும். தினமும் வெள்ளரிக்காய் ஜூஸினை குடித்து வந்தால், எளிதில் கழிவுகள் வெளியேறும். கொழுப்புகள் கரையும். வெள்ளரிக்காயுடன் எந்த வகையான காய் மற்றும் பழங்கள் சேர்த்து உணவில் எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழச்சாறாகவும் குடிக்கலாம். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. அது சிறுகுடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. ஜீரண உறுப்பில் உண்டாகும் நல்ல பாக்டீரியாக்களை பெருக்கச் செய்கிறது.
இதனால் பசி நன்றாக எடுக்கும். தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஒரு நாளைக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைக்கும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். எனவே இத்தகைய வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவது நல்லது. உடல் பருமனாக இருப்பவர்கள் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், உடல் இளைத்து விடும். இதில் அதிக நீர்சத்து இருக்கிறது. கொழுப்பினை கரைக்க தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட்டும் உள்ளன.
வெள்ளரிக்காய் நீரினை சமன் செய்ய தேவையான எலக்ரோலைட்ஸ் அதிகம் கொண்டுள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் நிச்சயம் வெள்ளரிக்காய் உதவி செய்யும். வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும். அதிலும் இதனை தினமும் தவறாமல் குடித்து வந்தால், டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை அதிகம் உள்ளது.
உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள். வெள்ளரிக்காயில் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதனை குடித்து வர, உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்கள் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள். வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை குடித்து வர கண்களில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம். குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.