சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை ஏகப்பட்ட சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, பெரியவர்கள்-சிறுவர்கள் என மாற்றி மாற்றி நடந்து வருகிறது.
தற்போது பெரியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகிறது, இறுதிக்கட்டத்தை நோக்கியும் நிகழ்ச்சி வந்துகொண்டிருக்கிறது.
கடந்த வாரம் நிகழ்ச்சியில் தேர்வான 10 இறுதிக்கட்ட போட்டியாளர்களுக்கு ஒரு ஸ்கூட்டி வழங்கி போட்டியாளர்களை குஷி படுத்தினார்கள், நிகழ்ச்சியையும் ஒருபடி மேலே கொண்டு சென்றார்கள்.
அழுத பென்னி தயாள்
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் நடுவர்களில் ஒருவர் தான் பென்னி தயாள், மிகவும் கூலான ஒரு நடுவர் என்றே கூறலாம். இந்த வாரம் அன்புடன் நான் என்ற ரவுண்ட் வந்துள்ளது, அதாவது நடுவர்களுக்காக போட்டியாளர்கள் பாடினார்கள்.
பென்னி தயாள் தனக்காக ஒரு போட்டியாளர் பாடியதை கண்டு கண் கலங்கி மேடையிலேயே மிகவும் எமோஷ்னல் ஆகியுள்ளார்.
அந்த புரொமோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.‘