பிரியா பவானி சங்கர்
2017 -ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
தற்போது இவர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற மார்ச் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.
அட்ஜஸ்ட்மென்ட்?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானியிடம் தொகுப்பாளர் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அவர், ” நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது இருந்து தற்போது வரை யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை”.
“எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை” என்று பிரியா பவானி கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது?