சீரியல் நடிகர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் தான் செம்பருத்தி. ஆரம்பத்தில் கதையில் வந்த அடுத்தடுத்த திருப்பம், நாயகன்-நாயகி கெமிஸ்ட்ரி என எல்லாம் சிறப்பாக இருக்க ரசிகர்களால் அதிகம் ஆதரிக்கப்பட்டது.
பின் இடையில் என்ன பிரச்சனையோ நாயகன் கார்த்திக் ராஜ் தொடரில் இருந்து விலகினார், பின் வேறொருவர் நடிக்க வந்தாலும் முதல் இருந்த ரீச் தொடருக்கு கிடைக்கவில்லை.
1000 எபிசோடுகளை எட்டிய பிறகு தொடர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
கார்த்திக் ராஜ்
கனா காணும் காலங்கள், ஆபிஸ் போன்ற தொடர்களில் கார்த்திக் ராஜ் நடித்தாலும் செம்பருத்தி சீரியல் தான் பெரிய ரீச் கொடுத்தது. இப்போது கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் தான் கார்த்திக் ராஜ் நடித்துள்ள Black & White பட வேலைகள் சென்சார் முடிந்துள்ளதாகவும் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருப்பதாக பதிவு போட்டுள்ளார். எனவே ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை
கூறி வருகின்றனர்.