நியூசிலாந்தில் காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்கு ஆலோசனை கொடுப்பதற்காக 6.4 மில்லியன் டொலர் நியூசிலாந்து அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது.
உலகளவில் பல்வேறு பரிமாணங்களில் ஆண் – பெண் காதலித்து வருகின்றனர். இதில் அவர்களுடைய காதல் திருமணத்தில் சேராமல் போனால் காதலர்கள் பிரிந்து விடுகின்றனர்.
மேலும், தங்களுடைய கருத்து வேறுபடுகளாலும் பிரிந்து விடுகின்றனர். இதனால் சிலர் காதல் தோல்வியில் மனமடைந்து தற்கொலை செய்யும் அளவிற்கு முடிவு எடுத்து விடுகின்றனர்.
இந்நிலையில், காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சார குழுவை நியூசிலாந்து அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
மேலும், இதற்காக நியூசிலாந்து அரசாங்கம் 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மனம் திறந்து பேச வைப்பது போன்றவை தான் இந்த பிரச்சார குழுவின் வேலை.
நியூசிலாந்தில் இந்த புது முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.