நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமான நிலையில் நேற்று மதியம் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
விஜய் உட்பட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டுக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
அஜித்தை பாராட்டிய பார்த்திபன்
இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்களுக்கு ஒவ்வொருவராக அஜித் நன்றி கூறி இருக்கிறார். தந்தை இறந்த சோகத்திலும் அஜித் அமராவதி பட தயாரிப்பாளருக்காக செய்த ஒரு விஷயத்தை குறிப்பிட்டு நடிகர் பார்த்திபன் பாராட்டி இருக்கிறார்.
“தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது” என பார்த்திபன் கூறி இருக்கிறார்.