சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை ஒருவர் சொந்த கணவரை ஆள் வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சுந்தரி சீரியலில் நடித்து வரும் ரம்யா என்ற நடிகை கோவையை சேர்ந்தவராம். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளை அம்மா வீட்டில் விட்டுவிட்டு நடிக்க சென்றுவந்ததாக கூறப்படுகிறது.
குழந்தைகளை கவனிக்காமல் இருப்பதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆள் வைத்து தாக்கிய ரம்யா
இந்நிலையில் ரம்யா அவரது நண்பரான டேனியலை வைத்து கணவர் ரமேஷை தாக்கி இருக்கிறார்.
இது பற்றி போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததால் தற்போது நடிகையை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.