நடிகை நதியா
தமிழ் சினிமாவில் 1985ம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நதியா.
இப்படத்தை தொடர்ந்து மந்திரப் புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து படங்கள் நடித்து பிரபலமானார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவந்த நதியா இப்போது அம்மா, அக்கா போன்ற வேடங்களில் கமிட்டாகி நடிக்கிறார்.
திருமணத்திற்கு பின்
1988ம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் கணவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இருவருமே நன்கு வளர்ந்து நாயகியாகும் அளவிற்கு உள்ளனர்.
56 வயதாகும் நடிகை நதியா அண்மையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் சூரிய ஒளியில் கேஷுவலாக எடுத்த புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதே ஆகாதா, எப்படி இவ்வளவு இளமையாக உள்ளீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram