ரச்சிதா மற்றும் தினேஷ்
சின்னத்திரை பிரபலங்களில் பலர் உடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் சந்தோஷமாக திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் ஒருசில பிரபலங்களுக்கு காதல் திருமணம் கடைசி வரை வருவது இல்லை. அப்படி தான் ரச்சிதா மற்றும் தினேஷ் திருமணம் வாழ்க்கை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது.
ரச்சிதா பிக்பாஸ் வந்தபோது அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார் என கூறப்பட்டது, ஆனால் தினேஷ் ஒரு பேட்டியில் தற்போது இருவருக்கும் ஒரு பிரச்சனை அதனால் தனியாக இருக்கிறோம் என்றார்.
விவாகரத்து முடிவு
ஆனால் இப்போது என்னவென்றால் இருவருக்கும் விரிசல் அதிகம் ஏற்பட்டு தினேஷ் விவாகரத்து பத்திரம் தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.