தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை!

ரம்யா
2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா.

இதையடுத்து சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபல நடிகையாக மாறினார். இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.

தற்கொலை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ” நான் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றி கொண்டிருக்கும் போது என்னுடைய அப்பா மரணமடைந்தார்”.

“அந்த நேரத்தில் நான் அவரோடு இல்லை. இதை நினைத்து நான் மிகவும் வருந்தினேன். தற்கொலை செய்ய கூட முயன்றேன். அந்த நேரத்தில் ராகுல் காந்தி எனக்கு ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்தார்” என்று ரம்யா கூறியுள்ளார்.