பத்து தல
சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து கடந்த 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பத்து தல.
கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், சந்தோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை மக்கள் கொடுத்துள்ளனர்.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்த 4 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கிறதா இல்லை குறையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.