நானி
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி. இவர் ராஜமௌலி இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகமெங்கும் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது வருகிறது.
சம்பள விவரம்
இந்நிலையில் நடிகர் நானி தசரா படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் ரூபாய்.15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.