ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பேசிய நடிகர்

ரோபோ ஷங்கர்
நல்ல உடல் எடையுடன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். அவரைப் பற்றி ஒரு தகவல் திடீரென வைரலாகி வருகிறது, என்ன விஷயம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

அதாவது அவர் உடல்எடை மிகவும் குறைந்து காணப்படுகிறார், அவரது மனைவி ஒரு படத்திற்காக தான் இப்படி உடல் எடை குறைத்து வருகிறார் வேறு ஒன்றும் இல்லை என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என செய்திகள் வெளியானது.

நடிகரின் நண்பர்
நடிகர் ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பரான போஸ் வெங்கட் அவரைப் பற்றி கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர், ரோபோ ஷங்கருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதும், உடல் எடை குறைந்ததும் உண்மைதான்.

யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அவரது உடல்நிலை குறித்து நிறைய காரணங்கள் கூறுகின்றனர், விரைவில் ரோபோ ஷங்கர் பூரண குணமடைந்து பழையபடி நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என கூறியுள்ளார்.