திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குஷ்பு

குஷ்பூ
திரைப்படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது திடீரென உடல்நிலை மோசமானதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

என்ன ஆனது?
குஷ்பூவுக்கு Adeno virus தொற்று ஏற்பட்டு மிக அதிக ஜுரம் வந்திருக்கிறது. மேலும் உடல்வலி மற்றும் weakness அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.

“Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி நினைக்காதீர்கள். உங்கள் உடலில் அறிகுறி தெரியும்போது உஷாராகிவிடுங்கள்” என குஷ்பூ எல்லோரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)