விஜய் படம் குறித்து அச்சத்தில் இருக்கும் விநியோகஸ்தர்கள்

லியோ
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்ற படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் செம ஹிட் அடித்ததால்.

பிஸினஸ்
இந்த நிலையில் லியோ படம் ஓவர்சீஸில் மிகப்பெரிய வசூலை தரும் என்று தற்போதே கணித்துவிட்டனர்.

அதற்கு முக்கிய காரணம் விக்ரம் ஓவர்சீஸில் ரூ 52 கோடி வரை ஷேர் கிடைத்தது.

தற்போது லியோ படத்தை வெளிநாடுகளில் ரூ 60 கோடி வரை விற்றுள்ளார்களாம்.

இதனால் போட்ட பணம் வருமா என்று தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது, இதையும் தாண்டி லாபத்தை தந்தால், விஜய் தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகர் தற்போது என்று கூறிவிடலாம்.