கனடாவின் சில பகுதிகளில் பீட்சா விநியோகம் செய்வது போன்று நிதி மோசடிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் நோர்த் யோர்க் பகுதியில் இவ்வாறு பீட்சா விநியோக சாரதி என்ற போர்வையில் நபர் ஒருவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஏமாற்றியுள்ளார்.
அட்டை மூலமாக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும் எனவும் தம்மிடம் கையில் பணம் இருப்பதாகவும் கூறி குறித்த பெண்ணிடம் டெபிட் அட்டையை வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20 டாலர் பணம் பீட்சாவிற்காக கொடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த தொகையை டெபிட் அட்டையின் மூலம் குறித்த பெண்ணை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அதற்கான பணத்தை வழங்குவதாக கூறி இவ்வாறு டெபிட் அட்டை மோசடி இடம் பெற்றுள்ளது.
குறித்த டெபிட் அட்டையே மற்றும் ஒரு அட்டையுடன் இணைத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 தொடக்கம் 25 வயது உடைய இரண்டு இளைஞர்களே இந்த மோசடியில் ஈடுபட்டதாக குறித்த பெண் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, மிஸ்ஸிசாகுவா பகுதியில் பீட்சா விநியோக சாரதி ஒருவர் பெண் ஒருவரிடம் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பீட்சா விநியோக சாரதி என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட குறித்த நபர் பெண்ணிடமிருந்து 2400 டாலர்களை மோசடி செய்துள்ளார்.
பீட்சா விநியோகம் செய்யும் சாரதி பணத்தை நேரடியாக ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் இதனால் அட்டை மூல கொடுப்பனவு செய்ய வேண்டி இருப்பதாகவும் கூறி பெண்ணிடமிருந்து அட்டையைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
கடன் அட்டையில் செலுத்தப்படும் பணத்திற்கு தொகைக்கு நிகரான பணத்தை வழங்குவதாக ஒப்புதல் அளித்து அட்டையை பெற்றுக் கொண்டு இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கடன் அட்டையோ அல்லது டெபிட் அட்டையேயோ வேறும் நபர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டாம் எனவும் வேறு ஒருவர் இயந்திரத்தில் அதனை உள்ளீடு செய்யவோ ஸ்வெப் செய்யவோ அனுமதிக்க வேண்டாம் எனவும் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.