தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் தான் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
உடல் நிலைகுறைவு
இந்நிலையில் தற்போது மாளவிகா அவினாஷ் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய இவர், ” உங்களுக்கு ஒற்றை தலைவலி இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். மருத்துவமனைக்கு செல்லுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார்.