கொடிய நோயால் அவஸ்தைப்படும் அஜித் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளிவந்த ராசி, முகவரி, சிட்டிசன், வாலி, ரெட், வில்லன் போன்ற பல படங்களை தயாரித்தவர் NIC ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.

இவர் அதிகமாக அஜித், சிம்பு படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக இவர் தயாரிப்பில் வாலு திரைப்படம் வெளியானது.

அதிர்ச்சியில் திரையுலகம்
இந்நிலையில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.