தேவர் மகன், பாண்டவர் பூமி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா.
இவர் திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நீலிமா சினிமாவை தாண்டி பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது.
நீலிமா வேதனை
சமீபத்தில் நீலிமா, ” என் கணவருக்கு தலைமுடிக்கு டை அடிப்பது பிடிக்காது. அவருக்கு இயல்பாக இருக்க தான் பிடிக்கும்”.
“அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் சிலர் அவரை தாத்தா என்று சொல்லி கலாய்க்கிறார்கள். ஆனால் நான் விமர்சனங்களை குறித்து கவலை படுவதில்லை” என்று நீலிமா கூறியுள்ளார்.