லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்தமைக்கான காரணத்தை கூறிய லாரன்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். இவர் நடித்திருந்த சந்தனம் ரோலில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் என்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இது தான் காரணமா?
இந்நிலையில் இது குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், நான் தான் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தேன். ஆனால் call sheet இல்லாத காரணத்தால் நடிக்க முடியாமல் போனது.

தற்போது நான் மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க போகிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.