ருத்ரன்
5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன்.
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது தான் ருத்ரன் திரைப்படம் வெளிவந்துள்ளது.
கலவையான விமர்சனங்களை பெற்று வரும் ருத்ரன் முதல் நாள் ரூ. 10 கோடி வரை வசூல் செய்திருந்தது.
வசூல் விவரம்
இந்நிலையில், இரண்டு நாட்கள் முடிவில் இரண்டு கோடிகள் மட்டுமே அதிகரித்து ரூ. 12 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளை விட வசூல் மிகவும் குறைந்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.