மூன்றாவது முறை கொரொனோவால் பாதிக்கப்பட்ட பிரபல தெலுங்கு நடிகர்

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் போசானி கிருஷ்ணா முரளி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவராக அரசு இவரை நியமித்தது.

இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஹைதராபாத் திரும்பினார். அப்போது போசானி கிருஷ்ணா முரளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதன் பின்னர், குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போசானி கிருஷ்ணா முரளி ஏற்கனவே இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.