ருத்ரன்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ருத்ரன். இப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் கதிரேசன்.
இப்படத்தில் முதல் முறையாக ராகவா லாரன்ஸுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார்.
மேலும் சரத்குமார் வில்லனாக நடிக்க, பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் நாசர், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் கடந்த மூன்று நாட்களில் ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாள் ரூ. 10 கோடி வரை வசூல் செய்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் குறைய துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.