திருமணம் குறித்த பேச்சுக்கு மேடையில் சமாளித்த த்ரிஷா

திரிஷா
பொன்னியின் செல்வன் ஹிட் ஆன பிறகு நடிகை திரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். தற்போது அவர் விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விரைவில் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸ் ஆவதால் அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது திரிஷா கலந்துகொண்டு வருகிறார்.

திருமணம் எப்போது
இந்நிலையில் நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷா மேடையில் பேசும்போது தொகுப்பாளர் அஞ்சனா ‘உங்களுக்கு எப்போ சுயம்வரம்? அதற்க்கு நாங்க வரலாமா’ என கேட்டார்.

‘என் உயிர் அவங்களோடு.. அப்படியே இருந்துட்டு போகட்டும் இப்போதைக்கு’ என ரசிகர்களை காட்டி இருக்கிறார் திரிஷா.

இதை விட அசால்டாக இந்த கேள்வியை வேறு யாரும் handle செய்ய முடியாது என அஞ்சனா திரிஷாவை விமர்சித்து இருக்கிறார்.