ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விலைகள், அந்தப் பகுதி மக்களின் வருட வருமானத்தை விடவும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சராசரியாக ஒருவரின் ஆண்டு வருமானத்தை விடவும், பெரும்பாலான வீடுகளின் விலைகள் உயர்வாக காணப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி ரியல் எஸ்டேட் இணைய தளமான Zoocasa வினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களின் வரி கழித்த பின்னரான வருமானத்தை விடவும் வீட்டு விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு என்பனவற்றுடன் ஒப்பீடு செய்து இந்த வீட்டு விலை பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்டன், மிஸ்ஸிசாகுவா, றொரன்டோ உள்ளிட்டம சில பகுதிகளில் மக்களின் வருமானத்தை விடவும் பெருமளவில் வீடுகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.