படையப்பா பட வசூல் சாதனையை முறியடித்ததா கில்லி படம்

படையப்பா – கில்லி
ரஜினிகாந்த் நடித்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் ரஜினிக்கு நிகரான நீலாம்பரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் சௌந்தர்யா, செந்தில், ராதாரவி, லட்சுமி, நாசர், மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே மோதல் ஒன்று போய்க்கொண்டு இருக்கிறது.

படையப்பா படத்தை விட கில்லி திரைப்படம் வசூலில் அதிகம் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

யார் அதிக வசூல்
அதெல்லாம் கிடைத்து, படையப்பா படத்தின் வசூல் கில்லி திரைப்படம் நெருங்க கூடவில்லை என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களின் வசூல் விவரம் தற்போது கிடைத்துள்ள நிலையில், படையப்பா ரூ. 64 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் கில்லி திரைப்படம் உலகளவில் ரூ. 33 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. இதன்முலம் படையப்பா படத்தை விட கில்லி திரைப்படத்தின் வசூல் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.