பிக் பாஸ் மூலமாக மீண்டும் பாப்புலர் ஆன ஷெரின் தற்போது குக் வித் கோமாளி ஷோவில் கலந்துகொண்டுவருகிறார்.
அந்த ஷோவில் ஷெரின் போலவே புகழ் பேசி செய்யும் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ‘திருமணம் எப்போ’ என கேட்ட கேள்விக்கு ‘இன்னும் ஒரு மாதத்தில்’ என கூறினார்.
காமெடிக்கு சொன்னேன்
ஷெரின் சொன்ன பதில் வைரல் ஆகி, அவருக்கு மாப்பிள்ளை யார் என எல்லோரும் கேட்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் “நான் காமெடிக்கு சொன்னேன், அது யாருக்குமே புரியவில்லை. எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் இல்லை” என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.