நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படங்களை தாண்டி பிற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் விளக்கம்
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் முதுகில் ஸ்ருதி பெயருடன் அருகில் முருகன் வேல் குறியீட்டை டாட்டூவாக போட்டுள்ளார்.
அதை புகைப்படம் எடுத்த சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பெரும் சர்ச்சையை உள்ளாகியது.
தற்போது இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்,” நான் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இளம் வயதில் ஸ்ருதி என்று டாட்டூ போட்டு கொண்டேன். தற்போது அதன் அருகில் முருகனின் வேல் சின்னத்தை டாட்டூ போட்டு கொண்டேன். இது நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று ஞாபகம்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.