நடிகை பிரியங்கா வடிவேலு குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
வடிவேலு
தமிழ் திரையுலகில் 1988-ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வடிவேலு. அதனைத் தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்ன கவுண்டர்’, ‘அரண்மனை கிளி’ படங்களில் நடித்து தனக்கென தனியிடத்தைப் பிடித்துக் கொண்டார்.
அவரது உடல் அசைவும், மொழி ஆளுமையும் தமிழ் சினிமாவில் கதாநாயகன்களுக்கு இணையான இடத்தை வடிவேலுக்குப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கினார். கொரோனா காலத்தில் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.
பிரியங்கா தகவல்
சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் மூலம் ரீஎண்டரி கொடுத்தார். இந்நிலையில், நடிகை பிரியங்கா அளித்துள்ள பேட்டி ஒன்றில், வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவதற்கு முக்கிய காரணம்,
அவர் நடிப்பு வராத நடிகர்களை நடிக்க வைத்து தனது திரைப்படத்தின் மிகவும் பிரம்மாண்டமாக காட்டி விடுவார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னை அவர் தான் பிரபலமாக்கி விட்டார் எனத் தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா, வடிவேலுவுடன் காதல் தேசம், மருதமலை என இணைந்து கலக்கியது குறிப்பிடத்தக்கது.