பொன்னியின் செல்வன் 2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்று பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து நேற்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
உலகளவில் இத்தனை கோடி வசூலா
இந்நிலையில் உலகளவில் இப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் உலகளவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரூ. 60 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ஆனால் பொன்னியின் செல்வன் முதல் பாகம் முதல் நாள் உலகளவில் ரூ. 70 கோடி வரை வசூல் செய்திருந்தது. இதை வைத்து பார்க்கும் பொழுது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு முதல் நாள் வசூல் குறைவு தான்.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்குமா என்று.