தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இருந்து விலகும் பிரபலம்

தமிழும் சரஸ்வதியும்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது தமிழும் சரஸ்வதியும் தொடர். இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா ஆகியோர் ஹீரோ,ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பெனி தொடங்கி முன்னுக்கு வர முயற்சித்து வருகின்றனர். மேலும் வசுந்தராவுக்கு குழந்தை பிறப்பது போல சமீபத்தில் காட்சிகளும் வந்திருக்கிறது.

விலகிய நடிகை
இந்நிலையில் தற்போது வசுந்தரா ரோலில் நடித்து வந்த நடிகை தர்ஷனா திடீரென தொடரில் இருந்து விலகி இருக்கிறார். ரசிகர்களை அதிகம் கவர்ந்த அவர் திடீரென விலகியது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க விருப்பம் இல்லாமல் தான் தர்ஷனா தொடரில் இருந்து வெளியேறினாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.