பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நேற்று ஜீவா அனுப்பிய நபருக்கு வேலை தர முடியாது என மூர்த்தி கூறிவிடுகிறார். அந்த விஷயத்தை பற்றி திரும்பி வந்து ஜீவாவிடம் சொல்ல அவர் ஷாக் ஆகிறார்.
அதன் பிறகு இன்றைய எபிசோடில் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குள் வருகிறார். தனம் மற்றும் முல்லையை நலம் விசாரித்துவிட்டு ஜீவாவின் சர்டிபிகேட்களை வாங்கி செல்கிறார். ஆனால் ஜீவா வீட்டுக்குள் வராமல் வெளியில் கார் அருகிலேயே நிற்கிறார். அதன் பின் தனம் வெளியில் வரும்போது கூட ஜீவா ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றுவிட்டு கிளம்பி சென்றுவிடுகிறார்.
ஐஸ்வர்யா மருத்துவமனையில்..
ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு செய்ய வேண்டும் என கண்ணன் திட்டமிட்டு கொண்டிருக்கிறார். அதற்காக செலவுக்கு என்ன செய்வது என குழப்பத்தில் இருவரும் இருக்கின்றனர். சேனலில் வீடியோ வெளியிட்டு காசு சம்பாதிக்கலாம் என்றால் அந்த அளவுக்கு லைக்குகள் கிடைக்கவில்லை.
அதனால் எதாவது செய்து சேனலுக்கு அதிகம் லைக்குகள் கொண்டு வர வேண்டும் என எண்ணி டான்ஸ் வீடியோ போடலாம் என சொல்கிறார் ஐஸ்வர்யா. கர்ப்பமாக இருக்கும் போது வேண்டாம் என சொல்லாமல் கண்ணனும் அதற்கு ஓகே சொல்கிறார்.
இருவரும் பார்க்கில் டான்ஸ் ஆடும் நேரத்தில் ஐஸ்வர்யா தவறி கீழே விழுந்துவிடுகிறார். அந்த நேரத்தில் எதுவும் ஆகாததால் வீட்டுக்கு வந்துவிடுகின்றனர்.
அதன் பின் ஐஸ்வர்யாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுவிடுகிறது. அவரை கண்ணன் வேலையில் இருந்து வேகமாக வந்து ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று சேர்க்கிறார்.
ஐஸ்வர்யாவுக்கு என்ன ஆகும்? அது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.