கமல் ஹாசன்
நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
இதையடுத்து கமல் 36 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க போவதாக தகவல் வெளியானது. மேலும் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா பெயரும் அடிப்பட்டது.
இந்நிலையில் தற்போது கமலின் 234 படத்தில் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் வித்யா பாலன் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இன்னும் வரவில்லை.