காத்துவாக்கில படத்தில் முதலில் கதிஜாவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் காத்துவாக்குல ரெண்டு காதல். அந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் காதலிப்பது போல தான் கதை இருக்கும்.

சமந்தா கதிஜா என்ற பெண்ணாக செம மாடர்ன் ஆக நடித்து இருந்தார். அந்த படத்தில் நடித்ததன் மூலமாக சமந்தா நடிகை நயன்தாரா உடன் அதிகம் நெருக்கமாக பழகியது குறிப்பிடத்தக்கது.

நிராகரித்த த்ரிஷா
முதலில் கதிஜா ரோலுக்கு த்ரிஷாவை தான் அனுகி இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அவர் முதலில் ஓகே சொன்னாலும் அதன் பின் சில காரணங்களால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

அதற்கு பிறகு தான் சமந்தாவிடம் விக்னேஷ் சிவன் பேசி இருக்கிறார். அவரும் முதலில் தயங்கினாலும் முழு கதையை கேட்டுவிட்டு நடிக்க ஓகே சொன்னாராம்.