தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனவர். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் அவர் போட்டியாளராக கலந்துகொண்டார். மேலும் சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார்.
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர்.
பிரேக்கப்
சமீபத்திய பேட்டி ஒன்றில் தர்ஷா குப்தா தனது காதல் பிரேக்கப் பற்றி பேசி இருக்கிறார். தான் பிரேக்கப் செய்த காதலன் தற்போது வரை தன்னிடம் கெஞ்சிக்கொண்டிரு இருப்பதாக கூறி இருக்கிறார்.
“நம்பிக்கை தான் முக்கியம், ஒரு முறை அது போய்விட்டால் அவ்வளவு தான். Trust இல்லை என்றால் கோடீஸ்வரனாக இருந்தால் கூட எனக்கு வேண்டாம். குடிசையில் கூழ் குடித்தாலும் பரவாயில்லை, உண்மையாக இருக்க வேண்டும்” என அவர் கூறி இருக்கிறார்.