பிரபல சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தான் விவாகரத்து பெற்றதை அறிவிக்க போட்டோஷூட் நடத்தி இருப்பது தற்போது வைரலாகி இருக்கிறது.
அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்று இருக்கிறார் அவர். முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன அவர் சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு இருக்கிறார்.
விவாகரத்து போட்டோஸ்
வழக்கமாக நடிகர் நடிகைகளை விவாகரத்து பெற்றால் அந்த செய்தியை பெரிதாக பேசமாட்டார்கள். ஆனால் ஷாலினி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை பல விதங்களில் கொண்டாடி இருக்கிறார்.
திருமண போட்டோவை கிழிப்பது, கையில் மது பாட்டில் உடன் போஸ் கொடுப்பது என பல விதமாக அவர் போஸ் கொடுத்திருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.இதோ..