பைக் கார் என அனைத்தையும் விற்ற கெளதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்திக் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.

அதன்பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன் என தொடர்ந்து 16 படங்கள் நடித்து முடித்துள்ளார்.

இப்போது Criminal என்ற படத்தி வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆகஸ்ட் 16 1947, பத்து தல போன்ற படங்கள் விமர்சன ரீதியாக நல்ல ரீச் பெற்றது.

சொந்த விஷயம்
கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமாவை காதலித்து நவம்பர் 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு பேட்டியில் கௌதம் கார்த்திக் பேசும்போது, நான் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது என்று நினைப்பேன், அதனால் தான் எனது திருமணத்தைக் கூட எனது சொந்த செலவில் செய்தேன்.

கொரோனா காலத்தில் கூட எனது பைக், கார் என எல்லாவற்றையும் விற்றுவிட்டேன், அப்போது எனக்கு துணையாக இருந்தவர் மஞ்சிமா தான். எந்தவொரு முடிவாக இருந்தாலும் அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் எடுப்பேன் என கூறியிருக்கிறார்.