நடிகை ராதிகாவிற்கு இன்னும் ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை கேள்வி எழுப்பிய சரத்குமார்

நடிகர் சரத்குமார் குடும்பத்தில் நடிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

சரத்குமாரின் மனைவி ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடிப்பது மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களை தயாரித்து நடித்து வருகிறார்.

ராதிகா தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மா ரோல்களில் தான் தோன்றி வருகிறார். அவர் சினிமாவுக்கு நடிக்க வந்து 45 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஹீரோயினாக நடித்த அவர் தற்போது அம்மா ரோல்களிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஏன் இன்னும் தேசிய விருது கொடுக்கல?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சரத்குமார், ‘சிறந்த நடிகை என்று சொன்னால் அதில் ராதிகாவும் ஒருவர். ஆனால் தற்போது வரை அவருக்கு தேசிய விருது தரப்படவில்லை, அது ஏன்?’ என கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மகள் வரலட்சுமியும் சினிமாவை பற்றி நன்கு படித்துவிட்டு தான் நடிகையாக இருக்கிறார் எனவும் சரத்குமார் கூறி இருக்கிறார்.