பாக்கியலட்சுமி சீரியல்
ஊரில் 3, 4 மனைவி வைத்திருப்பவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறேன், ஒரே ஒரு திருமணம் செய்து நான் படும் பாடும் அப்பப்பா என படத்தில் இடம்பெற்ற வசனம் நியாபகம் இருக்கும்.
இப்போது அப்படி ஒரு புலம்பலில் தான் கோபி இருக்கிறார். ஆசை இல்லாமல் முதல் கல்யாணம் நடந்ததால் ஆசையாக தனது முன்னாள் காதலியை மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என இருந்தார்.
ஆனால் அவர் எப்போது மறுமணம் செய்தாரோ அப்போதே அவரது நிம்மதியும் போய்விட்டது, ஒவ்வொரு நாளும் ராதிகா சண்டை போட கோபி புலம்பலிலேயே உள்ளார்.
வெளிவந்த போட்டோ
சீரியல் குறித்து எப்போதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுக்கும் கோபி என்கிற சதீஷ் தற்போது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயதான தோற்றத்தில் உள்ளார், மேலும் இதுதான் வயதான கோபி என பதிவிட்டுள்ளார்.
எனவே பாக்கியலட்சுமி முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் வரப்போகிறதோ, அதில் சதீஷ் வயதான தோற்றத்தில் நடிக்கிறாரோ என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
View this post on Instagram