கஸ்டடி
வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கஸ்டடி. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வருகிற 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கலாய்த்த வெங்கட் பிரபு
இப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷனில் இயக்குனர் வெங்கட் பிரபு பேசும்பொழுது வாரிசு படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தில் ராஜு பேசியது போலவே பேசினார்.
‘ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் உந்தி, மாஸ் வேணுமா மாஸ் உந்தி’ என பேசினார். வெங்கட் பிரபு இப்படி பேசவும் நாகசைதன்யா விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Enna venumo, Ellame Undhi 😂👌#Custody pic.twitter.com/nRbIhe55gO
— Venkatramanan (@VenkatRamanan_) May 8, 2023